பிரித்தானியா-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து., மோடி-மன்னர் சார்லஸ் சந்திப்பு
இந்தியா-பிரித்தானியா இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தான அதே நாளில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு வியாழக்கிழமை மாலை Sandringham House-இல் நடைபெற்றது.
இந்நிகழ்வை பிரித்தானிய அரச குடும்பம் X பக்கத்தில் பகிர்ந்தது: “இன்று மதியம், பிரித்தானிய மன்னர், இந்தியப் பிரதமரை சந்தித்தார்.”
மோடி கூறியதாவது: “சந்திப்பு சிறப்பாக நடந்தது. வணிகம், முதலீடு, பகிர்ந்த நலன்கள், மற்றும் Vision 2035 குறித்து விரிவாக விவாதித்தோம். யோகா மற்றும் ஆயுர்வேதம், சுகாதாரம், சூழலியல் பாதுகாப்பு ஆகியன குறித்தும் His Majesty ஆர்வமுடன் பேசினார்.”
‘Ek Ped Maa Ke Naam’ இயக்கத்தில் மன்னர் சார்லஸ் பங்கேற்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள மன்னர் சார்லசுக்கு, மோடி ஒரு மரம் வழங்கினார், இது ‘Ek Ped Maa Ke Naam’ என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக நடப்படும். இந்த இயக்கம் உலகளாவிய ரீதியில் பரவியிருப்பதற்கு இது ஒரு புதிய தூண்டுகோலாக அமையும் என மோடி தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வர்த்தக ஒப்பந்தம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், லண்டனில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். பியூஷ் கோயல் மற்றும் பிரித்தானிய அமைச்சர் ஜொனத்தன் ரெனால்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Had a very good meeting with His Majesty King Charles III. We discussed different aspects of India-UK relations, including the ground covered in trade and investment in the wake of CETA and Vision 2035. Other subjects of discussion included education, health and wellness,… pic.twitter.com/kNnIKF3sCv
— Narendra Modi (@narendramodi) July 24, 2025
FTA-யின் முக்கிய அம்சங்கள்:
இந்தியாவின் துணி, ஆபரணங்கள், கடல் உணவு, தொழில்நுட்ப பொருட்கள், தேக்கம்செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கு சுங்க வரி இல்லாத நுழைவு
விவசாயிகள், மீனவர்கள், சிறு நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்மை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |