நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர்! பிரதமர் மோடியின் உரை
இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(18 -ம் தேதி) தொடங்கியது.
இன்றைய கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் அனைவருமே வரலாற்று சிறப்பு மிகக் கட்டிடத்துக்கு விடை கொடுக்க இருக்கிறோம்.
இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்றாலும், பணம் மற்றும் உழைப்பு நம்முடையதே.
இந்தியர்களின் சாதனைகள் பற்றி எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறது, சந்திரயானின் வெற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது, இந்தியாவின் வலிமையை இது எடுத்துக்காட்டுகிறது.
ஜி20 மாநாட்டின் வெற்றியும் தனி நபரின் வெற்றியல்ல, கட்சியின் வெற்றியும் அல்ல, 140 கோடி மக்களின் வெற்றி என தெரிவித்தார்.
மேலும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விடை தருவது மிகவும் உணர்ச்சிகரமான தருணம், பல நெகிழ்ச்சியான நினைவுகள், கசப்பான நினைவுகளும் இதில் இணைந்துள்ளன என தெரிவித்தார்.
நாளை முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கிறது, இதற்கான விழா ஏற்பாடுகளும் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |