வேளாண் துறைக்கு ரூ.35,000 கோடி நிதி அறிவித்த பிரதமர் மோடி
இந்திய வேளாண் துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.35,400 கோடி நிதியை அறிவித்துள்ளார்.
'பிரதான் மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனா’ (PM-DDKY) எனப்படும் இந்த திட்டம், 11 அமைச்சகங்களின் கீழ் இயங்கும் 36 துணைத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெரும் Dalhan Atmanirbharata Mission எனும் புதிய முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இது ரூ.11,440 கோடி நிதியுடன் செயல்படுகிறது.
டெல்லியில் பூசாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மற்றும் மீன்வளத் தொழிலாளர்களுடன் பிரதமர் நேரடியாக உரையாடினார்.
மேலும், ரூ. 5450 கோடி பதிப்பிலான 1,100 திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் குளிர்சாதனக் கிடங்குகள், உணவு பதப்படுத்தல் மையங்கள், கால்நடை மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை அடங்கும்.
விவசாய உபகரணங்கள் மற்றும் இயற்கை உரங்களுக்கு GST குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.
"இந்த திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை.
இந்தியா, பால் மற்றும் மீன் உற்பத்தியில் உலகில் முன்னிலை வகிக்கிறது, இப்போது பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்" என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
PM-DDKY agriculture scheme 2025, Modi Rs.35,400 crore farm investment, Dalhan Atmanir bharaa Mission, India self-reliance in agriculture, PM Modi, Agricultural aspirational districts India, PM-DDKY 36 scheme convergence, Indian farmers income doubling plan