நண்பர் டிரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்: பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்று 47வது ஜனாதிபதியாகிறார்.
அவருக்கு உலகளவில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) தனது வாழ்த்தினை கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில், "உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர் டொனால்ட் டிரம்ப் அவர்களே.
உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, இந்தியா-அமெரிக்கா விரிவான, உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு நான் எதிர்நோக்குகிறேன்.
நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஒன்றாக இணைந்து மேம்படுத்தவும் பாடுபடுவோம்" என தெரிவித்துள்ளார்.
Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |