உயிர்பிழைப்பார் என நினைக்கிறேன்! சுலோவாகியா பிரதமர் குறித்து துணை பிரதமர் கூறிய விடயம்
சுலோவாகியா நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை துணை பிரதமர் டோமஸ் தாராபா தெரிவித்துள்ளார்.
அரசாங்க கூட்டத்தில் இருந்து வெளியேறும்போது சுலோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் துணை பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டோமஸ் தாராபா கூறுகையில், ''நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு தெரிந்தவரை அறுவை சிகிச்சை நன்றாக இருந்தது. இறுதியில் அவர் உயிர் பிழைப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை'' என ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |