வாக்னர் கூலிப்படையால்... எல்லையில் குவிக்கப்படும் ராணுவம்... முட்டி மோதும் இரு ஐரோப்பிய நாடுகள்
எல்லைக் காவல்படைக்கு ஆதரவாக பெலாரஸ் எல்லைக்கு 10,000 கூடுதல் துருப்புக்களை நகர்த்த போலந்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைக் காவல்படைக்கு ஆதரவாக
போலந்தின் பாதுகாப்பு அமைச்சர் Mariusz Blaszczak குறித்த தகவலை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். குறித்த 10,000 வீரர்களில் 4,000 பேர்கள் எல்லைக் காவல்படைக்கு ஆதரவாக களமிறங்குவார்கள் எனவும், எஞ்சியவர்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
@getty
ஆக்கிரமிப்பாளர்களைப் பயமுறுத்துவதற்காக பெலாரஸின் எல்லைக்கு அருகில் இராணுவத்தை நகர்த்துகிறோம், அதனால் அவர்கள் எங்களைத் தாக்கத் துணியமாட்டார்கள் எனவும் அமைச்சர் Mariusz Blaszczak குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உள்விவகார துணை அமைச்சர் Maciej Wasik தெரிவிக்கையில், பெலாரஸுடனான தங்களது எல்லைக்கு 2,000 கூடுதல் துருப்புக்களை போலந்து அனுப்பும் என்றார்.
வாக்னர் கூலிப்படையினர்
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை பெலாரஸ் நாட்டில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போலந்து தங்களது அச்சத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரமும் பெலாரஸ் தமது எல்லைக்கு அருகில் இராணுவப் பயிற்சியைத் தொடர்கிறது.
@reuters
மேலும், போலந்தை தாக்க வாக்னர் கூலிப்படையினர் துடிப்பதாகவும், அவர்களை தாம் பொறுமைக் காக்க வலியுறுத்தி வருவதாக பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko பலமுறை கூறியிருக்கிறார்.
மட்டுமின்றி, சமீப மாதங்களில் போலந்து எல்லையை கடக்க முயலும் முக்கியமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க குடியேறிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |