மனைவியின் கல்லறையில் கணவனை கைது செய்த பொலிஸார்: சிசிடிவி காட்சியில் தெரியவந்த உண்மை
மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் கல்லறைக்கு அருகே இறுதி சடங்கு நடத்தி கொண்டு இருந்த கணவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கணவனை கைது செய்த பொலிஸார்
மனைவி பிரான்சிலி குஸ்ஸோ ரிகோனின்(Franciele Gusso Rigoni) மர்மமான கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவர் அடார் ஜோஸ் லாகோ(Adair Jose Lago) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் கல்லறைக்கு அருகே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பிரேசிலின் பரானா மாநிலத்தில் இறுதி சடங்கு நடத்தி கொண்டு இருந்த கணவனை பொலிஸார் விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
Franciele Gusso Rigoni- Adair Jose Lago
சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு கணவர் அடார் ஜோஸ் லாகோ-யை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சியில் சிக்கிய கணவர்
முதலில் மனைவி மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக பொலிஸாருக்கு கணவர் மாலை 5 மணியளவில் தகவல் தெரிவித்து இருந்த நிலையில், தடயவியல் அறிக்கையில் மனைவி பிரான்சிலி குஸ்ஸோ ரிகோனின் மதிய நேரம் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டது.
Franciele Gusso Rigoni
அதே நேரத்தில் பொலிஸார் அவரது வீட்டை சோதனையிட்ட போது, அங்குள்ள சிசிடிவி காட்சியில் கணவர் அடார் ஜோஸ் லாகோ மனைவி பிரான்சிலி குஸ்ஸோ ரிகோனின் உடலை வீட்டிற்கு எடுத்து வருவது போன்று தெரிகிறது.
மனைவி பிரான்சிலின் தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட காயம் ஆகியவற்றுடன் காரில் கிடப்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்ததை தொடர்ந்து, மனைவியின் கொலையில் கணவரின் சாத்தியமான பங்களிப்பை உறுதிப்படுத்தி பொலிஸார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆனால் இந்த கொலைக்கான காரணம் மற்றும் வழிமுறையை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
CCTV footage