8,000 கொலை மிரட்டல்கள்... பெண் அரசியல்வாதி முன்மொழிந்த விடயம்
பொது கழிப்பறைகளில் இலவச சானிட்டரி பேட்களை முன்மொழிந்த பிறகு, 8,000க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக ஜப்பானிய பெண் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சானிட்டரி நாப்கின்கள்
ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் 27 வயதான அயகா யோஷிதா. மார்ச் 25ம் திகதி தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட அவர், திடீரென்று எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது, அது ஒரு பிரச்சனையாக மாறியது என குறிப்பிட்டிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, நான் சென்றபோது ட்சு நகர மண்டபத்தில் உள்ள கழிப்பறையில் நாப்கின்கள் எதுவும் இல்லை. நான் வீடு திரும்பும் வரை சரியாகச் சமாளிக்க முடியவில்லை. 27 வயதிலும் இது நடக்கும் என குறிப்பிட்ட அவர், கழிப்பறை காகிதத்தைப் போல எல்லா இடங்களிலும் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரது பதிவுக்கு பதிலடியாக 8,000 கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஒருவரே 8,000 கொலை மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது கண்டறியப்பட்டது.
அடக்கும் முயற்சி
அதில், அவசரகால நாப்கின்களின் தேவை தொடர்பில் நன்றாகத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வயதாகிவிட்டதால், தன்னுடன் எடுத்துச் செல்லாத சட்டமன்ற உறுப்பினர் அயாகா யோஷிதாவை நான் கொன்றுவிடுவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 31 அன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட யோஷிதா, தனக்கு 8,000க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறி, நான் பயந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த அச்சுறுத்தல்கள் என்னை மிரட்டி, ஒரு மாகாண சபை உறுப்பினராக எனது செயல்பாடுகளை அடக்கும் முயற்சிகளின் ஒருபகுதி எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |