வளர்ப்பு மகனுடன் சிக்கிய பெண் அரசியல்வாதி., சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி
தாய்லாந்தில், பெண் அரசியல்வாதி ஒருவர் வளர்ப்பு மகனுடன் சிக்கிய காணொளி வைரலாகி அங்குள்ள சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது 24 வயது வளர்ப்பு மகனுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், அவரது கணவரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
தாய்லாந்தில் செல்வாக்கு மிக்க பெண் அரசியல்வாதியான 45 வயதான பிரபாபோர்ன் சோய்வாட்கோ (Prapaporn Choeiwadkoh) தனது 24 வயது வளர்ப்பு மகன் ஃபிரா மஹாவுடன் (Phra Maha) படுக்கையறையில் தனிமையில் இருந்தபோது, அவரது கணவர் Ti-யிடம் பிடிபட்டார்.
இந்த வளர்ப்பு மகன் ஒரு துறவி என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவிக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் இடையேயான உறவில் சந்தேகம் இருப்பதாகவும், இதனை ஆதாரத்துடன் பிடிக்க திட்டமிட்ட Ti, இருவரையும் கையும் களவுமாக பிடிப்பதற்காக கிட்டத்தட்ட 5 மணி நேரம் வாகனம் ஓட்டிவந்ததாக கூறியுள்ளார்.
24 வயதான இந்த வளர்ப்பு மகன் ஃபிரர் மஹாவை இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு ஒரு கோவிலில் இருந்து தத்தெடுத்தனர்.
தற்போதைய சம்பவத்தையடுத்து இந்த வளர்ப்பு மகன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி தற்போது தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளின் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Madam Ple என்றும் அழைக்கப்படும் பிரபாபோர்ன் சோய்வாட்கோ, மத்திய தாய்லாந்தின் Sukhothai மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான அரசியல்வாதி ஆவார்.
அவர் தற்போது உள்ளூர் வர்த்தக சபையின் தலைவராக உள்ளார் மற்றும் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
தற்போது சர்ச்சையான அவரது காணொளி வெளியானதால், கட்சி மேலிடம் அவரையும் சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Prapaporn Choeiwadkoh, Husband catches politician wife in bed with adopted son, monk, Thailand politician Prapaporn Choeiwadkoh