நிற்க முடியாத நிலையிலும்.. முன்னாள் போப்பின் இறுதிச் சடங்குகளை நடத்திய போப் பிரான்சிஸ்
வாட்டிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்வில், போப் பிரான்சிஸ் முன்னாள் போப்பிற்கு இறுதி பிரியாவிடை அளித்தார்.
போப் பெனடிக்ட் மறைவு
மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், வாட்டிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். கடந்த 200 ஆண்டுகளில் உயிருடன் இருக்கும் போப் ஒருவரால் முன்னாள் போப்பிற்கு இறுதிச் சடங்கு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்சிஸ், குச்சியின் உதவியுடன் நின்று இறுதிச் சடங்குகளை நடத்தினார். பெனடிக்ட்டின் சவப்பெட்டியைத் தொட்டுத் தலை குனிந்தபடி போப் பிரான்ஸிஸ் விடை கொடுத்தார்.
இறுதிச் சடங்கின் முடிவில் பெனடிக்ட்டின் சவப்பெட்டி 12 வெள்ளைக் கையுறை அணிந்த Pallbearers-களினால் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இரண்டு லட்சம் பேர் அஞ்சலி
இந்த நிகழ்வில் ஸ்பெயினின் ராணி சோபியா மற்றும் பெல்ஜியத்தின் மன்னர் பிலிப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உத்தியோகபூர்வ பிரதிநிதிகளை அனுப்ப இத்தாலி மற்றும் ஜேர்மனிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. மறைந்த பெனடிக்ட் உடலுக்கு மூன்று நாட்களில் சுமார் 2,00,000 பேர் அஞ்சலி செலுத்தினர்.
தனக்கு இனி தேவாலயத்தை வழி நடத்த பலம் இல்லை எனக்கூறி பெனடிக்ட் விலகியதை பிரான்ஸிஸ் பாராட்டினார்.
@AFP via Getty Images