சக்கர நாற்காலியில் கிறிஸ்துமஸ் மாஸிற்கு வந்த போப் ஆண்டவர்! ரஷ்யாவின் போருக்கு மறைமுக கண்டனம்
வாடிகனில் கிறிஸ்துமஸ் மாஸிற்காக போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் வருகை புரிந்தார்.
போப் ஆக 10வது கிறிஸ்துமஸ்
வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தனது 10வது கிறிஸ்துமஸை கொண்டாட வருகை புரிந்தார்.
ஆனால் அவர் முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியில் தேவாலயத்திற்கு வந்தார். அவர் நீண்ட நேரம் நிற்க முடியாது என சபையினர் தெரிவித்தனர்.
ரஷ்யாவுக்கு மறைமுக கண்டனம்
போப் பிரான்சிஸ் தனது ஆராதனையின் போது பிரசங்கம் செய்தார். அப்போது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் குறித்து மறைமுகமாக கண்டித்தார்.
அவரது உரையில், 'போர், வறுமை மற்றும் அநீதியால் விழுங்கப்படும் குழந்தைகளை நினைத்து எல்லாவற்றிற்கும் மேலாக கவலை கொள்கிறேன்' என குறிப்பிட்டார்.
@Reuters
மேலும் அவரது உரையில், 'மக்கள் போராலும், வறுமையாலும் அவதிப்படுகின்றனர். நம் உலகில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பசியில் தங்கள் அண்டை வீட்டாரையும், தங்கள் சகோதர சகோதரிகளையும் கூட உண்கிறார்கள். எத்தனை போர்களைப் பார்த்தோம்! இன்றும் எத்தனை இடங்களில் மனித மாண்பும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகின்றன!' என தெரிவித்தார்.
ஆனால் அவர் உக்ரைனை நேரடியாக குறிப்பிடவில்லை. கோவிட் காரணமாக பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட வருகையைத் தொடர்ந்து, சுமார் 7000 பேர் கூடியிருந்த நிலையில் புனிதமான கிறிஸ்துமஸ் ஈவ் மாஸ்க்கிற்கு போப் பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.