இது கட்டாயம்... பிரித்தானியர்களுக்கு புதிய விதி அமுல்! பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவிலிருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என போர்ச்சுகல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று ஜூன் 28ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய விதி ஜூலை 11ம் திகதி வரை அமுலில் இருக்கும் என போர்ச்சுகல் அரசு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து வான், சாலை அல்லது கடல் வழியாக போர்ச்சுகல் வரும் பயணிகள் அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
இல்லையெனில் வீடு அல்லது அரசு ஏற்பாடு செய்துள்ள இடத்தில் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என போர்ச்சுகல் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.