பைக்கில் உலகம் முழுவதும் பயணிக்கும் ஆசை; மரணப் பயணமாக முடிந்த சோகம்
உலகம் முழுவதும் 50 நாடுகளுக்கு தனது பைக்கில் பயணிக்க ஆசைப்பட்ட நபர் தனது பயணத்தின்போது சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் மரணம்
ஈரான் வழியாக குவெட்டாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் கார் விபத்தில் உயிரிழந்தார்.
28 வயதான போர்த்துகீசிய சுற்றுலாப் பயணி நுனோ மிகுவல் விலாவ் காஸ்டன்ஹேரியா (Nuno Miguel Vilao Castanheria), பலுசிஸ்தானின் சாகாய் மாவட்டத்தில் கார் விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டால்பந்தில் அவரது பைக் பிக்-அப் வாகனத்துடன் மோதியதாக சாகாய் துணை ஆணையர் உசேன் ஜான் பலோச் தெரிவித்தார்.
Photo via Aaj News
இறந்த சுற்றுலாப்பயணியின் உடலை அதிகாரிகள் குவெட்டாவுக்கு மாற்றினர். மேலும் அவரது அடையாள அட்டையும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த சுற்றுலாப்பயணியின் மரணம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக பாகிஸ்தானில் உள்ள போர்ச்சுகல் தூதரகத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் 50 நாடுகளுக்கு பயணிக்க விரும்பினார்
மே 21-ம் திகதி தனது பயணத்தை தொடங்கினார். உலகம் முழுவதும் 50 நாடுகளுக்குச் சென்று 85,000 கி.மீ.க்கு மேல் பயணிக்க விரும்பினார்.
Photo via Aaj News
'நான் முடிந்தவரை உலகத்தைப் பார்த்து ரசிக்க விரும்புகிறேன், புதிய இடங்களைச் சந்திக்க விரும்புகிறேன், புதிய மனிதர்களைச் சந்திக்க விரும்புகிறேன், புதிய சாகசங்களை எதிர்கொள்ள விரும்புகிறேன். நான் முடிந்தவரை சாலைக்கு வெளியே பயணம் செய்கிறேன், எப்போதும் என் பைக்கில் தனியாக பயணம் செய்கிறேன்' என்று அவர் தனது இணையதளத்தில் கூறியுள்ளார்.
diarioleiria
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |