இந்திய கடவுளின் அவதாரம் என கூறி வந்த பெண்... பக்தர்களுக்கு அளித்த அருவருப்பான தண்டனை
52 வயதாகும் Woo May Hoe என்பவரே தம்மை கடவுளின் அவதாரம் என கூறி வந்துள்ளார்.
எட்டு ஆண்டுகளில் இவரது பக்தர்களான 14 பேர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு இரை
சிங்கப்பூரில் தம்மை இந்திய கடவுளின் அவதாரம் என கூறி வந்த பெண் மீது 50 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த பெண் சாமியார் தமது பக்தர்களுக்கு தண்டனையாக மனித கழிவுகளை சாப்பிட வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. 52 வயதாகும் Woo May Hoe என்பவரே தம்மை கடவுளின் அவதாரம் என கூறி வந்துள்ளார்.
தற்போது அவர் மீது பொதுமக்களை திட்டமிட்டு ஏமாற்றியது, கடுமையான காயத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
@reuters
2020 அக்டோபர் மாதம் முதல் விசாரணைக் கைதியாக இருந்துவரும் Woo May Hoe மீது அப்போது 10 பிரிவுகளில் மட்டுமே வழக்குப் பதியப்பட்டது. மேலும், 2012 முதல் 2020 வரையிலான எட்டு ஆண்டுகளில் இவரது பக்தர்களான 14 பேர்களை தொடர் துன்புறுத்தல்களுக்கு இரையாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மட்டுமின்றி, இவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில், இவரது பக்தர்கள் ஐவரை கட்டாயப்படுத்தி மனித கழிவுகளை உட்கொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற ஆவணங்களில், Woo May Hoe தனது பக்தரான 43 வயது பெண்மணி மீது கொடூரமாக நடந்து கொண்டதும், கத்தரிக்கோலால் அவரை தாக்கியதாகவும், அவரது பல் ஒன்றை பிடுங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
பல பேர்களிடம் பல மில்லியன் சிங்கப்பூர் டொலர் தொகையும் இவர் கைப்பற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண் ஒருவர் கோவிலுக்கான பசுக்களை வாங்கும் பொருட்டு இவருக்கு 350,000 சிங்கப்பூர் டொலர் நன்கொடையாக அளித்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.