Post office திட்டம்: மாதம் ரூ.3,500 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு (RD) திட்டம் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
மாதந்தோறும் சிறிய தொகையை சேமித்து எதிர்காலத்தில் நல்ல தொகையை பெற இந்த திட்டம் ஏற்றதாக உள்ளது.
இதில் ஊழியர்கள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் முதலீடு செய்யலாம்.

தற்போது 5 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் வழக்கமான சேமிப்புடன் வருமானத்தையும் பெறுகிறார்கள்.
அந்தவகையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.3,500 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.2,10,000 முதலீடு செய்யப்படும்.
6.7 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில், 5 ஆண்டுகள் முடிவில் முதலீட்டாளர் சுமார் ரூ.2.49 லட்சம் பெறலாம்.
குறிப்பாக இந்த திட்டத்தில் வட்டியாக மட்டும் சுமார் ரூ.39,000 கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் இந்திய அரசாங்கத்தால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.
குறிப்பாக, நீண்டகால சேமிப்புக்கு போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |