கொட்டித் தீர்த்த பலத்த மழை... உயிருடன் புதைந்து போன மக்கள்: வெளிவரும் பகீர் தகவல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கே பலத்த மழைக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த மண் சரிவில் சிக்கி 19 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் டசின் கணக்கான குடியிருப்புகளும் புதைந்து போயுள்ளதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 20 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், 19 பேர் என அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக ஜப்பானின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் மண் சரிவுகள் தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பாதிப்புக்குள்ளான Atami பகுதியில் பொலிசார், மீட்புக்குழுவினர், தற்காப்பு வீரர்கள் என ஏராளமானோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பல பகுதிகளில் வெளியேறும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.