முடிவுக்கு வரும் போர்... புடினுக்கு எதிராக களமிறங்கும் பலம்பொருந்திய Ozeros: யார் இவர்கள்?
உக்ரைன் மீதான படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான குழு ஒன்று ரகசியமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெருக்கமான தொழிலதிபர்கள் குழு
ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியை அடுத்து, Ozeros என அறியப்படும் புடினுக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்கள் குழு ஒன்று தற்போது ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
@AFP
Ozeros குழுவானது 1996ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ரஷ்யாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள், செல்வாக்கு மிகுந்த தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள், ரஷ்ய அரசியலில் முதன்மையான நிலையில் இருப்பவர்கள் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது இந்த குழுவினரே, விளாடிமிர் புடினை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கி, உக்ரைன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் முதல் படியாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை இவர்கள் இலக்கு வைத்துள்ளனர்., அத்துடன், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சார்பான துறைகளையும் குறி வைத்துள்ளனர்.
Sergey Kiriyenko ஆட்சி பொறுப்புக்கு
வாக்னர் கூலிப்படையின் தோல்வியில் முடிந்த கிளர்ச்சியை அடுத்து, இதுவரை 8 ராணுவ தளபதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது பதவியை இழந்துள்ளனர். மேலும், வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சி தொடர்பில் Ozeros குழு அறிந்திருந்ததாகவே கூறப்படுகிறது.
@getty
மட்டுமின்றி, விளாடிமிர் புடினை நீக்கும் பொருட்டு, வாக்னர் கூலிப்படையின் உதவியை இவர்கள் நாட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புடின் நீக்கப்பட்டால், 60 வயதான Sergey Kiriyenko என்பவரை ஆட்சி பொறுப்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றே Ozeros குழு கடுமையாக போராடி வருகிறது. புடின் தோல்வியை ஒப்புகொண்டு, பதவியை தாங்கள் முன்னிலைப்படுத்தும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் Ozeros குழு முடிவுக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |