செல்போனுக்கு சார்ஜ் போடச் சென்ற கர்ப்பிணி பெண் மரணம்! 9 மாத குழந்தையும் வயிற்றில் இறந்தது
பிரேசில் நாட்டில், குளித்துமுடித்துவிட்டு, தன் போனை சார்ஜில் போடச் சென்ற 17 வயது இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
கூடுதல் துயரம் என்னவென்றால், அவர் நிறைமாத கர்ப்பிணி!
கணவனுக்கு கேட்ட அலறல் சத்தம்
கடந்த வியாழக்கிழமை, பிரேசில் நாட்டில் வாழ்ந்துவந்த ஜெனிபர் (Jennifer Karolayne, 17) என்னும் பெண்ணின் கணவர், திடீரென ஏதோ பலமாக விழும் சத்தமும், தன் மனைவி பயங்கரமாக அலறும் அத்தமும் கேட்டு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.
Image: Newsflash
உடனடியாக அவர் தன் மனைவியைத் தூக்க முயல, அவருக்கு ஷாக் அடித்திருக்கிறது. நடந்தது என்னவென்றால், ஜெனிபர் குளித்து முடித்துவிட்டு வந்து, ஈரத்துடன் தனது போனை சார்ஜ் போட முயன்றிருக்கிறார். அவர் எக்ஸ்டென்ஷன் போர்டில் தனது மொபைல் சார்ஜரை பொருத்த முயலும்போது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
கூடுதல் துயரம்
உடனடியாக ஜெனிபரின் கணவர் அவசர உதவியை அழைக்க, பொலிசாருடன் வந்த அவசர உதவிக்குழுவினர் ஜெனிபரை பரிசோதிக்கும்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
கூடுதல் துயரம் என்னவென்றால், ஜெனிபர் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது.
Image: Newsflash
தம்பதியர் குழந்தைக்காக தொட்டில் எல்லாம் தயார் செய்துவைத்துவிட்டு பிரசவத்துக்காக காத்திருந்தபோது ஜெனிபர் உயிரிழந்துள்ளதால், அந்த குடும்பம் முழுவதுமே சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |