விருதுநகர் தொகுதியில் முறைகேடு, மீள் எண்ணிக்கை நடத்த வேண்டும் - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
மறைந்த விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் என அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த விஜய பிரபாகரன்
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் போன்றவர்கள் போட்டியிட்டனர்.
இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ள விஜயபிரபாகரன் முதல் முறையாக அரசியலில் களமிறங்கினார்.
விஜயபிபாகர் (தேமுதிக), மாணிக்கம் தாக்கூர் (காங்) மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியாக விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதன் போதே தன் மகன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
பிரேமலதாவின் பகிரங்க குற்றச்சாட்டு
விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட சூழ்ச்சியால் தான் வீழ்த்தப்பட்டார்.
0.4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜயபிரபாகரன் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியது ஏன்?
தனக்கு நெருக்கடி இருந்ததாக வெளிப்படையாகவே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அது தொடர்பிலும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றி என முதல்வர் கூறியது ஏன்?
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |