ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் மீது பயங்கரவாத தாக்குதல்: வெளிவரும் பகீர் தகவல்
வெனிசுலா எல்லைக்கு அருகே பறந்தபோது கொலம்பியா ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது கொலம்பியா ஜனாதிபதி Iván Duque மற்றும் உள்விவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், அப்பகுதியை சேர்ந்த மாகாண ஆளுநர் என நால்வரும் Cúcuta பகுதி நோக்கி ஹெலிகொப்டரில் சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், ஹெலிகொப்டர் தரை இறங்கும் நிலையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பேசிய ஜனாதிபதி Iván Duque, இது ஒரு தீவிரவாத செயல் எனவும், கோழைத்தனமான தாக்குதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, வன்முறை அல்லது பயங்கரவாத செயல்களால் தாம் பயந்துடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தாக்குதலை முன்னெடுத்தவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொலம்பியா ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ELN என்ற இடதுசாரிகள் அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொலம்பிய-வெனிசுலா எல்லையில் இவர்கள் வியாபித்துள்ளனர். 1964ல் இருந்தே செயல்பட்டு வரும் இவர்கள் கொலம்பியாவின் மிகப் பெரிய கிளர்ச்சிக் குழு என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலம்பியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் கருதப்படுகிறது.