மத்திய கிழக்கு நாடுகள் வழி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கூடாது: அமெரிக்காவுக்கு நெருக்கடி அளிக்கும் முக்கிய நாடு
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை அதற்கு பயன்படுத்த ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள்
கத்தார் பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ள ஈரானிய பிரதான தளபதி முகமது பாகேரி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
@afp
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதைத் தடுக்குமாறு பிராந்திய நாடுகளை பாகேரி வலியுறுத்தியுள்ளார்.
ஹமாஸ் படைகளுடனும் ஈரானுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள கத்தார் நாட்டில் தான் மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது.
@epa
முன்னதாக காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்ற தரப்பினரையும் மோதலில் ஈடுபடுத்த வழிவகுக்கும் என தளபதி முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எதிர்வினை ஏற்பட வாய்ப்பாக அமையும்
மேலும், இஸ்ரேல் நிர்வாகத்தின் குற்றங்களின் தொடர்ச்சி, சில நாடுகளின் நேரடி ஆதரவு மற்றும் உதவி ஆகியவை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள பாகேரி, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக மேலும் சிலர் களமிறங்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
@reuters
மேலும், இஸ்ரேலின் போர் குற்றங்களை தடுக்க உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றார். மட்டுமின்றி, காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான போக்கு எதிர்ப்பு குழுக்களிடமிருந்து ஏதேனும் எதிர்வினை ஏற்பட வாய்ப்பாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |