கொடுஞ்செயல்... பழி வாங்கும் வாக்னர் கூலிப்படை: சாலையோரத்தில் சடலங்கள்
விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படை தளபதி
குறித்த விவகாரத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் வாக்னர் கூலிப்படை தளபதி ஒருவர் ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
@reuters
தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் தற்போது சடலங்கள் மீட்கபட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டும் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வாக்னர் தளபதி Shekhovtsov உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஜூன் 24ம் திகதி வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காதவர்கள் இவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Wagner group
ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான
ரஷ்ய அரசாங்கத்தை ஆதரிக்கும் வாக்னர் கூலிப்படையின் தளபதி ஒருவர் தொடர்புடைய படுகொலையை முன்னெடுத்துள்ளார் எனில், வாக்னர் கூலிப்படையில் சட்ட ஒழுங்கு இல்லை என்பது அம்பலமாகியுள்ளதாக கூறுகின்றனர்.
@ap
உக்ரைன் ஆதரவு ரஷ்யர்களை முன்னர் சம்மட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர் வாக்னர் கூலிப்படையினர். ஆனால் தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுத கிளர்ச்சியில் ஆதரவளிக்காத வீரர்களை படுகொலை செய்யும் நிலைக்கு எட்டியுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |