இளவரசர் ஹரியும் மேகனும் எடுத்துள்ள முடிவு: பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி...
அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரியும் மேகனும் எடுத்துள்ள ஒரு முடிவு, மக்களுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இளவரசர் ஹரியும் மேகனும் எடுத்துள்ள முடிவு
ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறிய பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும், தற்போது கலிபோர்னியாவிலுள்ள Montecito என்னும் இடத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில், அவர்கள் வீடு மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image: Getty Images
அவர்கள், Santa Barbara நகரிலுள்ள Hope Ranch என்னும் இடத்துக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாகவும், பரபரப்பாக அந்த பகுதியில் வீடு தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி
தாங்கள் புதிதாக செல்லும் இடத்தில் வாழும் மக்கள் தங்களை வரவேற்பார்கள் என ஹரியும் மேகனும் நினைக்கிறார்கள்.
ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல! ஆம், Hope Ranch பகுதியில் ரியல் எஸ்டேட் நடத்தும் ஒருவர், ஹரியும் மேகனும் அங்கு வருவது குறித்து மக்கள் கவலையுடன் தன்னிடம் விசாரித்துவருவதாக தெரிவித்துள்ளார்.
ஹரியும் மேகனும் Hope Ranchக்கு குடிவருவதால், அங்கு அமைதி கெடும் என அங்கு வாழும் மக்கள் பயப்படுகிறார்களாம்.
ஹரியும் மேகனும் தங்கள் பகுதிக்கு குடிவந்தால், கூடவே தங்கள் பாதுகாவலர் படையையும் அழைத்துவருவார்கள் என்றும், அதனால் அந்த பகுதியின் அமைதி பாதிக்கப்பட்டு கவனம் ஈர்க்கும் ஒரு இடமாக அது ஆகிவிடும் என்றும் மக்கள் கருதுகிறார்கள்.
ஆகவே, ஹரி மேகன் குடும்பம் Hope Ranchக்கு வருவதை அங்கு வாழும் மக்கள் விரும்பவில்லை என்பதே தற்போது அங்கு பரபரப்பாக பேசப்படும் விடயமாக உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |