இளவரசி கேட் மிடில்டனிடம் உதவியை நாடும் இளவரசர் ஹரி!
இளவரசர் ஹரி உதவிக்காக தனது சகோதரன் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டனை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஹரி தனது அண்ணியான இளவரசி கேட் மிடில்டனிடம், மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் பிற மூத்த அரச குடும்பத்தாருடன் சமரசம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இப்போது பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரியுடன் பேசும் ஒரே ஒரு நபர் இளவரசி கேட் மிடில்டன் மட்டும் தான் என கூறப்படுகிறது.
Getty Images
சர்வதேச ஊடகமொன்றில் வெளியான தகவல்களின்படி, இளவரசர் ஹரி கேட் மிடில்டனை அணுகி, அவரது நினைவுக் குறிப்பு புத்தகமான Spare மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படங்களின் அறிவிப்புக்குப் பிறகு தனது தந்தை மற்றும் சகோதரனுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு உதவுமாறு வேண்டியுள்ளார்.
மேலும், இளவரசர் ஹரி தனது நினைவுக் குறிப்பு புத்தகம் மற்றும் வரவிருக்கும் நெட்பிலிக்ஸ் ஆவணத் தொடருடன், ஏற்கெனவே வெளியாகி பிரபலமாக உள்ள The Crown எனும் வலைத்தொடருடன் இணைத்து பேசப்படுவதைப் பார்த்து பரிதாபமாக உணருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
சகோதரர்களுக்கு இடையே அமைதி காப்பாளராக இருந்த கேட் அவர்களின் நல்லிணக்கத்தில் 'மிகவும் நம்பிக்கையுடன்' இருப்பதாக கூறப்படும் நிலையில், இளவரசர் ஹரி, கேட் மிடில்டனின் உதவியை நாடியுள்ளார்.