ராணியாகவேண்டிய இளவரசிக்கு திடீர் மாரடைப்பு: செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்
தாய்லாந்து நாட்டின் அரியணை ஏறும் வரிசையில் அடுத்ததாக இருக்கும் இளவரசிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கிங் சென்ற இளவரசிக்கு மாரடைப்பு
தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkornஇன் மகளும், அடுத்து ராணியாகும் வரிசையில் உள்ளவருமாகிய இளவரசியாகிய Bajrakitiyabha (44), நேற்றிரவு Kaho Yai தேசிய பூங்காவில் தனது நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென அவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டுவிழவே, உடனடியாக அவருக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மணி நேரம் வரை சிகிச்சையளிக்கப்பட்டும் அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படும் நிலையில், ஹெலிகொப்டர் மூலம் அவர் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Image: Wason Wanichakorn/AP/REX/Shutterstock
அவரது தந்தையாகிய மன்னர் Vajiralongkorn, மகளுக்கு அருகிலேயே இருந்துவருகிறார்.
உயிரிழந்துவிட்டதாக ஒரு தகவல்
இந்நிலையில், ஊடகவியலாளரான Andrew Marhsall என்பவர், இளவரசி செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பொருள் என்னவென்றால், அவர் உண்மையில் இறந்துவிட்டார், ஆனால், செயற்கை முறையில் அவர் உயிருடன் வைக்கப்பட்டுள்ளார் என்பதுதான் என்றும், ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அரண்மனை வட்டாரமும் இளவரசி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவே என்று கூறியுள்ளதாகவும், மன்னர் அடுத்த முடிவு எடுக்கும்வரை இளவரசிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார் Andrew Marhsall.
Image: NurPhoto via Getty Images
Image: SOPA Images/LightRocket via Getty Images
⚠️ BREAKING — Thailand’s Princess Bajrakitiyabha has been pronounced dead by doctors, palace sources say. No official announcement has yet been made by the monarchy or regime. pic.twitter.com/tnM2X2Xiqo
— Andrew MacGregor Marshall (@zenjournalist) December 15, 2022