ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: உளவியல் சிகிச்சையில் ரஷ்ய வீரர்கள்!
உக்ரைன்-ரஷ்யா இடையே புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த முயற்சிகளின் அடிப்படையில் புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்த புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் தலா 146 வீரர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Today, our people are coming home. Warriors of the Armed Forces, the National Guard, the State Border Guard Service, and civilians. Most of them had been in captivity since 2022.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 24, 2025
We are bringing home journalist Dmytro Khyliuk, who was abducted in the Kyiv region in March 2022.… pic.twitter.com/HMhmJwGMtR
உக்ரைனில் இருந்து விடுவிக்கப்பட்ட ரஷ்ய பிணைக் கைதிகள் தற்போது பெலாரஸ் நாட்டில் உளவியல் மற்றும் மருத்துவ உதவிகளை பெற்று வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தரப்பு வழங்கிய தகவலில், குர்ஸ்க் பகுதியை சேர்ந்த 8 ரஷ்ய வீரர்களை மாஸ்கோவிடம் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |