காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனுமன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த பிரியங்கா காந்தி - வைரலாகும் வீடியோ
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று அனுமன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த பிரியங்கா காந்தியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து முன்னிலையில் காங்கிரஸ்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு இன்று எண்ணப்பட்டு வருகிறது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று 43% வாக்குகளுடன் பெரும்பான்மையான இடத்தை பிடித்து முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், சென்னையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றியையடுத்து சோனியாகாந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.
வழிபாடு செய்த பிரியங்கா காந்தி
இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ahead of #Karnataka assembly election results, Congress leader #PriyankaGandhiVadra offered prayers at #Shimla's Jakhu temple. #PriyankaGandhi #KarnatakaElections2023
— Siddhant Anand (@JournoSiddhant) May 13, 2023
#KarnatakaPolls #ResultsWithNews18 #Congress pic.twitter.com/VWV388CNhy
Congress Party is going to form government in Karnataka. People of Karnataka is with Rahul Gandhi & Priyanka Gandhi. pic.twitter.com/aMYbLHQCDF
— Aaron Mathew (@AaronMathewINC) May 13, 2023