ரஷ்யா திரும்பிய உக்ரேனிய முன்னாள் அமைச்சர் படுகொலை! புடின் உதவியாளர்களுக்கு இதே கதி தான் ஏற்படும் - இராணுவ செய்தித்தொடர்பாளர்
கிரெம்ளின் சார்பு உக்ரேனிய அரசியல்வாதியான இல்லியா கிவா (Illia Kyva) ரஷ்யாவில் படுகொலை செய்யப்பட்டார்.
உக்ரேனிய முன்னாள் அமைச்சர்
மாஸ்கோ புறநகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் உக்ரேனிய முன்னாள் அமைச்சரான இல்லியா கிவாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
Aleksandr Gusev/SOPA Images/LightRocket/Getty Images
அவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இல்லியா கிவா ரஷ்யாவுக்கு திரும்பிய நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் அன்று, நாடு ''நாசிசத்தால் நனைந்துவிட்டது, ரஷ்யாவால் விடுதலை வேண்டும்'' என்றும் தொலைக்காட்சியில் பேசும் போது கிவா கூறியிருந்தார்.
இராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர்
மேலும் அவர் ரஷ்ய குடியுரிமை கோரி விளாடிமிர் புடினுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உக்ரைனில் உள்ள நீதிமன்றம் அவருக்கு தேசத்துரோக குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
Reuters
இந்த நிலையில் உக்ரைனின் இராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர் Andriy Yusov கூறுகையில், 'கிவா முடித்துவிட்டார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். உக்ரைனின் மற்ற துரோகிகளுக்கும், அதேபோல் புடின் ஆட்சியின் உதவியாளர்களுக்கு இது போன்ற ஒரு முடிவு ஏற்படும். கிவா ஒரு மிகப்பெரிய துரோகி, அயோக்கியர் மற்றும் அவரது மரணம் நியாயமானது' என கட்டமாக தெரிவித்துள்ளார்.
УНІАН
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |