ட்விட்டர் மற்றும் ஸ்னாப்சாட் பதிவுகள்... பெண் ஒருவரை அதிரடியாக கைது செய்த நாடு
சவுதி அரேபியாவில் சமீபத்திய சீர்திருத்தங்களை ஊக்குவித்து ட்விட்டர் மற்றும் ஸ்னாப்சாட் தளங்களில் பதிவுகள் செய்து வந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெண்கள் உரிமைகள் குறித்து பதிவு
குறித்த பெண் சவுதி அரேபிய மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மேலதிக அடிப்படை உரிமைகளை வழங்கவும் கோரிக்கை முன்வைத்துள்ளார். 29 வயதான Manahel al-Otaibi என்பவர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் மற்றும் கலைஞராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
அவரது சமூக ஊடக பக்கங்களில் அடிக்கடி பெண்கள் உரிமைகள் குறித்து பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 2022 நவம்பர் மாதம் திடீரென்று அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவோ தண்டனை பெறவோ இல்லை எனவும், விசாரணை கைதியாகவே உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் இதுபோன்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. சமூக ஊடக பக்கங்களில் சீர்திருத்தத்தை ஊக்குவித்த காரணத்தால் ஒருவர் கைதாவது சமீபத்திய உதாரணமாக கூறப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை
லீட்ஸ் பல்கலைக்கழக மாணவியும் சவுதி அரேபிய நாட்டவருமான சல்மா அல்-ஷெஹாப் என்பவர் தனியாக ட்விட்டர் கணக்கு வைத்திருந்ததுடன் அரசாங்க எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைப் பின்தொடர்வது அவர்களில் கருத்துகளை மறு ட்வீட் செய்வது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
Photograph: ESOHR
சவுதி அரேபியா மொத்தமாக மாறிவிட்டது என உலக மக்களிடம் விளம்பரம் செய்து வந்தாலும், இன்னும் அடிப்படை சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் சவுதி பெண்கள் மீது அரசாங்கம் தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது என்றே கூறுகின்றனர்.