காலையில் இட்லி, பொங்கல்.. மதியம் நாட்டுக்கோழி! சீமானுக்கு தடபுடலாக உணவு ஏற்பாடு
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்திற்கு வரும் நேரத்தில் பலவகையான உணவுகள் ஏற்பாடு செய்வதற்கு லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சீமானுக்கு தொடரும் பிரச்சனை
40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்து மைக் சின்னத்தை உறுதி செய்தது.
அதுமட்டுமல்லாமல், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உணவு ஏற்பாடு
இந்நிலையில், எந்தெந்த மாவட்டத்திற்கு முக்கிய நிர்வாகிகள் செல்கிறார்களோ, அவர்களை ட்சியின் தலைமை அலுவலக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் குறித்து பேசி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, சீமான் மற்றும் அவருடன் வருபவர்கள் தங்குவது முதல் உணவு வரையிலான ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டு வருகிறதாம்.
காலை, மதியம், இரவு என்னென்ன உணவு என்ன என்பது குறித்த லிஸ்ட் தரப்பட்டுள்ளதாம். அதன்படி, காலையில் பொங்கல், இட்லி, தோசை, பூரி, சிறுதானியங்களில் தயாரிக்கும் உணவுகள் மற்றும் மதியம், சாதம், சாம்பார், ரசம், தயிர், 2 வகை காய்கறிகள், நாட்டுக்கோழி குழம்பு, வறுவல், சுக்கா, உப்பு கறி ஆகியவற்றில் ஒன்று என உணவுகள் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இப்படி ஒருபுறம் இருக்கும் நிலையில் சீமானின் குரல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "பிஜேபி 10 வருடம் ஆண்ட கட்சி, 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி பெரிய கட்சி பாஜக. சின்ன பையன் சீமானை பார்த்து சின்னத்தில் எதற்கு ஆட்டம் காட்டுகிறாய்" என்பது தொடர்பாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |