உக்ரைன் போர் முடிவடையப் போகிறது: எதிர்காலத்தைக் கணிக்கும் பெண் கூறும் பரபரப்பு தகவல்கள்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ரஷ்ய தரப்பில் ஏராளமான பொர் வீரர்கள் உயிரிழந்தும் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை.
இந்நிலையில், ரஷ்ய உக்ரைன் போர் எப்போது முடியும் என்பது குறித்த பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார் எதிர்காலத்தைக் கணிக்கும் ரஷ்யப் பெண் ஒருவர்.
உக்ரைன் போர் முடிவடையப் போகிறது
ரஷ்ய நாட்டவரான, எதிர்காலத்தைக் கணிப்பவர் என அழைக்கப்படும் Adelina Panina என்னும் பெண், உக்ரைன் போர் விரைவில் முடிவடையப் போவதாக தெரிவித்துள்ளார்.
(Image: POOL/AFP via Getty Images)
போரை முடிவுக்குக் கொண்டு வருவதைத் துவக்கும் ஒரு விடயம் சீக்கிரம் நடக்கப்போவதாக தெரிவிக்கும் Adelina, ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் ஒரு திருப்புமுனை நடக்கும் என்றும், அப்போது, ரஷ்யாவை போர்க்களத்தில் யாராலும் தோற்கடிக்கமுடியாது என்பதை உலகம் அறிந்துகொள்ளும் என்கிறார்.
உக்ரைனின் கதி என்ன?
அத்துடன், உக்ரைனில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் கூறியுள்ள Adelina, போர் முடிவடைவதைப் பார்க்க உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உக்ரைனில் இருக்கமாட்டார் என்றும், ஆனால், அதற்கு ரஷ்யா காரணமாக இருக்காது, அதாவது, ஜெலன்ஸ்கியைக் கொல்ல ரஷ்யா முயற்சி செய்யாது என்றும் கூறியுள்ளார்.
Image: big-stars.ru
ஜெலன்ஸ்கியின் விதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் Adelina, அவர் தப்பிச் சென்றுவிடுவார் என்றும், அதுவும், யாருக்கும் தெரியாமல் அமைதியாக தப்பிச் சென்றுவிடுவார் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |