சிறையில் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள்! லீக்கான ஆடியோவால் பரபரப்பு
ஆபாச பேச்சு, பண மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரி ஒருவர் மதனின் மனைவி கிருத்திகாவிடம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
பப்ஜி விளையாட்டு விளையாடி, அதன் மூலம் ஆபாசப் பேச்சு, பண மோசடி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மதன்.
இந்த நிலையில் மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர சிறை அதிகாரிகள் அவருடைய மனைவியிடம் ரூ.3 லட்சம் கேட்பதாக ஓர் ஆடியோ வெளியாகியிருக்கிறது.
மேலும் முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.