நடிகர் விஜய் உடன் முதல்வர் திடீர் சந்திப்பு!
நடிகர் விஜயை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .
சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இருந்ததாக முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 19ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், விஜய் உடன் ரங்கசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு, கணிசமான இடங்களை கைப்பற்றியது நினைவுக்கூரத்தக்கது.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு விஜய் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் போன்று விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் பட்டியலை பொது வெளியில் வெளியிடாமல், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டும் தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.