மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி! உயிர் தப்பிய மகன்..பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பொலிஸ் துணை ஆணையர் மனைவி மற்றும் உறவினரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் துணை ஆணையர்
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பொலிஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பரத் கெய்குவாட் (57).
இவர் பனீர் பகுதியில் மனைவி மொனு (44) மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தீபக் (33) என்ற உறவினர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அன்றைய தினம் அதிகாலையில் பரத், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி மொனுவை தலையில் சுட்டுள்ளார்.
உறவினரும் சுட்டுக்கொலை
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டு பரத்தின் மகனும், உறவினர் தீபக்கும் தங்கள் அறையில் இருந்து ஓடி வந்து பார்த்துள்ளனர்.
அவர்களை கண்டதும் பரத் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பரத்தின் மகன் துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிர்த்தப்பினார். இதற்கிடையில் பரத் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
News18
உடல்கள் மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |