மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட எடுத்த திட்டம் இது! விளாடிமிர் புடின் பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனுக்கு உதவி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன. ராணுவம் தொடர்பில் பல நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை அன்று, ஐ.நா.வின் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபை ரஷ்யாவை பெருமளவில் தனிமைப்படுத்தியது.
@Libkos/AP Photo
புடின் குற்றச்சாட்டு
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றில், 'நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை நன்கொடையாக வழங்கியுள்ளன. அவர்கள் பல்லாயிரக்கணக்கான டொலர்களை ஆயுதங்களாக அனுப்புகிறார்கள். இது உண்மையில் போரில் பங்கேற்பதாகும். இதன்மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளன' என குற்றம்சாட்டியுள்ளார்.
70,000 குடியிருப்பாளர்கள் இருந்த கிழக்கு உக்ரைன் பகுதியான பக்முத்தில் தற்போது சுமார் 5,000 பேர் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பகுதிக்கான பல மாத காலப் போராட்டம், ரஷ்யாவின் ஓர் ஆண்டு பழமையான படையெடுப்பின் ரத்தக்களரியான சண்டைகளில் சிலவற்றைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.