சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானம்: குற்றத்தை ஒப்புக் கொண்ட புடின்
அஜர்பைஜானி பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா பொறுப்பேற்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானம்
கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று பாகுவிலிருந்து புறப்பட்டு ரஷ்யாவின் செச்சினியா குடியரசின் க்ரோஸ்னி நோக்கி சென்ற அஜர்பைஜானி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்த 38 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட புடின்
இந்நிலையில் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் நடந்த சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பரில் நடந்த பயணிகள் விமான விபத்து சம்பவத்திற்கு பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜானி ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தான் காரணம் என்றும் புடின் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் ட்ரோன்களை குறிவைத்து ரஷ்யா இந்த ஏவுகணைகளை ஏவியதாகவும், அதே சமயம் இரண்டு ஏவுகணைகளும் விமானத்தின் மீது நேரடியாக மோதவில்லை, மாறாக சுமார் 10 மீட்டர் இடைவெளியில் ஏவுகணைகள் சுய அழிப்பு செய்யப்பட்டதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு வழங்குவதாகவும் புடின் உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |