உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு
உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே அலாஸ்காவில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் நேட்டோ பாணியிலான பாதுகாப்பை வழங்கும் வழிமுறைக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.
CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நேட்டோவில் இணைய விரும்பும் உக்ரைனின் முக்கியமான காரணங்களில் ஒன்றான “கட்டுரை 5”(Article 5) பாணியிலான பாதுகாப்பை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் சலுகையை ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் இருந்து பேச்சுவார்த்தையில் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இத்தகைய முன்மொழிவை புடின் ஒப்புக் கொண்டது இது தான் முதல் முறை என்றும் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார். இவை பேச்சுவார்த்தையின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த “கட்டுரை 5” விதிப்படி, உறுப்பு நாடுகள் மீது ஏதேனும் ஆயுத தாக்குதல் நடந்தால், அவை தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதி உறுப்பு நாடுகளும் எதிர் தாக்குதலில் ஈடுபடும்.
இந்த விதியை கடைசியாக அமெரிக்கா 2021ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தியுள்ளது.
ஜெலென்ஸ்கி வரவேற்பு
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தொடர்பாக X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உத்தரவாதங்களில் அமெரிக்கா வலுவாக நிற்பது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என தெரிவித்துள்ளார்.
மேலும் இது கடல், நிலம் மற்றும் வான் பகுதி பாதுகாப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், அத்துடன் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடந்த போது அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப்-யின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |