உக்ரைனில் புடின் இன்னும் சாதிக்கவில்லை! ரஷ்யா முக்கிய தகவல்
உக்ரைனுடனான ரஷ்யாவின் சண்டை தொடரும் நிலையில் அங்கு புடின் இதுவரை சாதித்தது என்ன என்பது குறித்து செய்தி தொடர்பாளர் பேசியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் ஒரு மாதமாக நடக்கும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பேட்டியின் போது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நின்று விட்டதாக தகவல் வெளியானதை டிமிட்ரி மறுத்தார்.
உக்ரைனில் புடின் இதுவரை என்ன சாதித்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், புதின் இன்னும் சாதிக்கவில்லை.
ஏற்கனவே நிறுவப்பட்ட திட்டங்கள், நோக்கங்களின்படி தாக்குதல் நடக்கிறது.
புடினின் முக்கிய குறிக்கோள்கள், உக்ரைனின் ராணுவ திறனை அகற்றுவது தான் என அதிரடியாக கூறியுள்ளார்.