38 பேர்களை பலிகொண்ட விமான விபத்து... மன்னிப்பு கேட்ட விளாடிமிர் புடின்
கிறிஸ்துமஸ் தினத்தன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான சோக சம்பவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொலைபேசியில் பேசியதாக
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் வீழ்த்தப்பட்டதை புடின் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 67 பேர்களில் 38 பேர் பலியான நிலையில், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் விளாடிமிர் புடின் சனிக்கிழமை தொலைபேசியில் பேசியதாக உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு விளாடிமிர் புடின் மன்னிப்பு கேட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், விமான விபத்து தொடர்பில் ரஷ்யா உரிய விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய முழுமையான விசாரணையே முன்னெடுப்பது முதன்மையன முன்னுரிமை என்றார்.
அத்துடன், ரஷ்யா தெளிவான விளக்கங்களை அளித்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றார். இதனிடையே, வெள்ளியன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், விபத்திற்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
உக்ரைன் ட்ரோன் தாக்குதல் என கருதி ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றே கூறுகின்றனர். இதனிடையே, ரஷ்யாவின் சிவில் ஏவியேஷன் ஏஜென்சியின் தலைவர் தெரிவிக்கையில், செச்சினியாவில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் நிலைமை மிகவும் சிக்கலாக மாறியுள்ளது என்றார்.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில், Grozny, Mozdok மற்றும் Vladikavkaz பகுதிகளில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா முறியடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
ஆனால், அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு என்பதை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளது. தொடர்புடைய விமானமானது அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து செச்சினியாவில் உள்ள குரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |