நாடு முழுவதும் நள்ளிரவு வாணவேடிக்கைகளை ரத்து செய்த ரஷ்ய ஜனாதிபதி புடின்
உக்ரைனுக்கு எதிரான போர் நீடித்துவரும் நிலையில், ட்ரோன் தாக்குதல்களுக்கு பயந்து புத்தாண்டு நள்ளிரவு வாணவேடிக்கைகளை ரத்து செய்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
கொண்டாட்டங்கள் ரத்து
புத்தாண்டை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் pyrotechnics நிகழ்ச்சிகள் மற்றும் புனித பசில் பேராலய வளாகத்தில் நடத்தப்படும் வாணவேடிக்கைகள் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.
ஆனால் இந்த ஆண்டு செஞ்சதுக்கம் பல மணிநேரங்களுக்கு உல்லாசப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ரஷ்யாவின் 11 நேர மண்டலங்களில் டசின் கணக்கான முக்கிய நகரங்களிலும் நள்ளிரவு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் பசிபிக் தலைநகர் விளாடிவோஸ்டாக் உட்பட கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாஸ்கோ மேயர் Sergei Sobyanin தெரிவிக்கையில்,
அச்சம் காரணமாகவே
மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் நள்ளிரவு வாணவேடிக்கைகள் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், போரினால் காயம்பட்டவர்கள் வாணவேடிக்கைகளால் எழும் சத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வாணவேடிக்கை மறைவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே கொண்டாட்டங்கள் ரத்து செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
புத்தாண்டில் வாணவேடிக்கைகளை ரஷ்யாவில் முதல் முறையாக பீற்றர் தி கிரேட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் மாஸ்கோ நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |