வாக்னர் கூலிப்படை தலைவர் குடும்பத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் இரங்கல்!
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாக்னர் கூலிப்படை தலைவர் மரணம்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்ததாக கூறப்படும் எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் விமானம் ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் தரையில் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உடன் சேர்த்து விமானத்தில் பயணம் செய்த 7 பணிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் என 10 உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் இறப்பு இன்னும் முழுமையாக உறுதிப்படுத்த படாத நிலையில், அவரது உடல் குறித்த விவரங்களும் இன்னும் எதுவும் தெளிவாக தெரியவில்லை.
ஜனாதிபதி புடின் இரங்கல்
இந்நிலையில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், பிரிகோஜின் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புடின், “திறமையான தொழிலதிபர், 1990களில் இருந்து அவரை நன்கு அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரிகொஜின் தனது வாழ்வில் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார், ஆனால் அவர் தேவையான முடிவுகளையும் அடைந்தார். பிரிகோஜின் சிக்கலான விதியை கொண்டவர் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
Putin on Prigozhin's death:
— Maria Drutska ?? (@maria_drutska) August 24, 2023
▪️I have known Prigozhin for a very long time, since the early 90s. He was a man of a complex fate, and he made serious mistakes in his life. But he achieved the necessary results — both for himself and when I asked him to, for our common cause,… pic.twitter.com/cRPFbM0IwA
மேலும் விபத்து குறித்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கும் விவரங்களை ரஷ்யா தீவிரமாக ஆராயும், ஆனால் சம்பவம் தொடர்பான பிற விவரங்களுக்கு கூடுதல் நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |