நான்கு உக்ரைன் பிராந்தியங்களில் புடின் விதித்த சிறப்பு சட்டம்: அதன் முக்கிய அம்சம் என்ன?
ரஷ்ய சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இந்த பிராந்தியங்களை முறைப்படுத்த வேண்டும்
இந்த நான்கு பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆணை
நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை சட்டவிரோதமாக ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்ட புடின், தற்போது அந்த நகரங்களில் புதிய சட்டத்தை விதித்துள்ளார்.
உக்ரைனின் Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய பிராந்தியங்களை சட்டவிரோதமாக ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் விளாடிமிர் புடின். இந்த நிலையில், தற்போது குறித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
@getty
அத்துடன், தற்போது நாம் ரஷ்ய சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இந்த பிராந்தியங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இந்த நான்கு பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆணையில் கையெழுத்திடுவதாக புடின் அறிவித்துள்ளார்.
அதாவது, குறிப்பிட்ட பகுதிகளில் இராணுவம் களமிறங்குவதுடன், மொத்த கட்டுப்பாடும் இனி இராணுவத்திடம் இருக்கும். பொதுவாக இராணுவச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றால், குறிப்பிட்ட பகுதியில் பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட உள்ளனர் அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களாலையே முன்னெடுக்கப்படும்.
இராணுவச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் பகுதியில், ஊரடங்கு அமுலில் இருக்கும், சிவில் சட்டம், சிவில் உரிமைகள் மற்றும் ஹேபியஸ் கார்பஸ் ஆகியவை இடைநீக்கம் செய்யப்படும்.
மேலும், பொதுமக்கள் மீது இராணுவ சட்டம் அல்லது இராணுவ விசாரணை முன்னெடுக்கப்படும். இந்த விதிகளை மீறும் பொதுமக்கள், இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்குரிய தண்டனை விதிக்கப்படும்.
@AP
பொதுவாக இராணுவச் சட்டங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே அமுலுக்கு கொண்டுவரப்படும், ஆனால் சில அசாதாரண சூழலில் காலவரையின்றி நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
ரஷ்ய படையெடுப்பை அடுத்து, உக்ரைனில் சிறப்பு இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
இதுதொடர்பில் தேசத்துக்கு உரையாற்றிய அவர், பொதுமக்கள் கட்டாயம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதுடன், சிக்கலான பணிகளில் ஈடுபடும் மக்கள் அல்லாதோர் வீட்டைவிட்டு வெளியே நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.