நேட்டோ நாடு மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்... புடின் மறுப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின்போது, ஒரு ட்ரோன், நேட்டோ உறுப்பு நாடான ரொமேனியாவில் விழுந்து வெடித்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நேட்டோ நாட்டுக்குள் நுழைந்த ட்ரோன்
நேற்று காலை, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைன் எல்லையிலுள்ள ரொமேனியா நாட்டிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது ஒரு ட்ரோன் விழுந்து வெடித்துள்ளது.

அந்தக் கட்டிடம் தீப்பற்றிய நிலையில், ஒரு தாயும் மகளும் காயமடைந்துள்ளார்கள். அந்தக் கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த தாக்குதலை நேட்டோ அமைப்பும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக கண்டித்துள்ளன.
புடின் மறுப்பு
இந்நிலையில், ரொமேனியாவில் விழுந்த ட்ரோன் ரஷ்ய ட்ரோன்தானா என கேள்வி எழுப்பியுள்ளார் ரஷ்ய ஜனாதிபடியான புடின்.
அத்துடன், அது உக்ரைன் நாட்டு ட்ரோனாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரொமேனியாவில் விழுந்த ட்ரோனின் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும், ரஷ்யா அது குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த அது உதவியாக இருக்கும் என்றும் புடின் கூறியுள்ளார்.
ரஷ்யா எப்போதுமே ஐரோப்பாவை அச்சுறுத்தியதில்லை என்றும், இப்போதும் அது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவில்லை என்றும் கூறியுள்ள புடின், ஆனால், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருவதாகவும், தாங்கள் செய்யும் மட்டுமீறிய செலவுகளுக்குக் கணக்குக் காட்டுவதற்காக அப்படிச் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |