போர் உக்ரைனுடன் நிற்காது... மாறிய புடினுடைய திட்டம்: புடின் விமர்சகர் பரபரப்புத் தகவல்
ரஷ்யா, உக்ரைன் போருடன் நிறுத்திக்கொள்ளாது, அது மூன்றாம் உலகப்போர் வரை தொடரக்கூடும் என்று கூறியுள்ளார் புடின் விமர்சகர் ஒருவர்.
பாதுகாப்புத்துறை அமைச்சரை பதவிநீக்கம் செய்த புடின்
திடீரென, தனது பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergey Shoiguவை பதவிநீக்கம் செய்துவிட்டு, அவருக்கு பதிலாக Andrei Belousov என்பவரை புடின் பதவியில் அமர்த்தியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
Image: POOL/AFP via Getty Images
புடின் தனது பாதுகாப்புத்துறை அமைச்சரை பதவிநீக்கம் செய்துள்ளது, அவர் உக்ரைன் போருடன் தனது போர்த்திட்டத்தை நிறுத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்கிறார் புடின் விமர்சகரான Ilya Ponomarev. அதாவது, புடின் மூன்றாம் உலகப்போர் வரை செல்லக்கூடும் என அவர் கருதுகிறார்.
Image: Getty Images
புடினுடைய முன்னுரிமை மாறிவிட்டது என்று கூறும் Ilya Ponomarev, புடின், தானே தனது ராணுவ முடிவுகளை எடுக்க விரும்புகிறார் என்கிறார். அமைச்சரவையில் புடின் செய்துள்ள மாற்றங்கள், அவர் உக்ரைனுக்கு அடுத்து பால்டிக் நாடுகள், போலந்து என தொடர்ச்சியாக பல நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதைக் காட்டலாம் என்கிறார் Ilya Ponomarev.
Image: Anadolu via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |