போரை நாங்கள் துவக்கவில்லை: ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து புடின் பதிலடி
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட விடயத்தால், கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார் புடின்.
போரை நாங்கள் துவக்கவில்லை
ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த புடின், நாங்கள் உக்ரைனிலுள்ள கட்டுப்பாட்டு மையங்களை தாக்குவது குறித்து பேசினோம். பதிலுக்கு உக்ரைன் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அது ரஷ்யாவையும், ரஷ்யக் குடிமக்களையும் அச்சுறுத்த மக்கள் வாழும் வீடுகளைத் தாக்க முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
Credit: East2West
இந்தப் போரை நாங்கள் துவக்கவில்லை என்று கூறியுள்ள புடின், 2014ஆம் ஆண்டு, உக்ரைன்தான் டான்பாஸ் பகுதியில் போரைத் துவக்கியது என்றும் கூறியுள்ளார்.
அணு ஆயுத பதிலடி கொடுக்கப்படலாம்
மேலும், தங்கள் மீதான தாக்குதல் குறித்துத் தான் கவலைப்படவில்லை என்று கூறியுள்ள புடின், பதிலடி கொடுக்க ரஷ்யாவைத் தூண்டும் முயற்சிகள் குறித்தே தான் கவலைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Credit: East2West
தாக்குதல் நடத்த அவர்கள் எங்களைத் தூண்டுகிறார்கள் என்று கூறியுள்ள புடின், உக்ரைன் மக்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அது Zaporizhzhia அணு மின் நிலையப் பணிகளுக்கு இடையூறு செய்யும் முயற்சிகளாகவோ அல்லது அணு ஆயுத பயன்பாடாகவோ இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Credit: AFP
அதைத் தொடர்ந்து, புடின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான Oleg Nilov என்பவரும், மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. நாங்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம், எங்கள் அணு ஆயுதங்கள் சேமிப்பகங்களில் சும்மா தூங்கிக்கொண்டே இருக்காது என்று கூறியுள்ளார்.