ஒரு வாரமாக கொலைப் பட்டியலில்... சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வாக்னர் கூலிப்படை தலைவனுக்கு இறுதியில் நேர்ந்த கதி
வாக்னர் கூலிப்படைத் தலைவனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு வாரம் முன்னர் கொலைப் பட்டியலில் இணைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
முதன்மை எதிரி எவ்ஜெனி பிரிகோஜின்
ஜூன் மாதம் வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோவில் முன்னெடுத்த கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்த நிலையிலேயே வாக்னர் தலைவனை கொல்லும் உத்தரவுக்கு விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
Credit: East2West
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவரும் பின்னர் முதன்மை எதிரியாக மாறியவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், வாக்னர் கூலிப்படையே தற்போது உறுதியும் செய்துள்ளது.
ஆனால் இது வெறும் ஒரு நாடகமாக இருக்கலாம் எனவும் சில ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு வாரம் முன்னர் தான் எவ்ஜெனி பிரிகோஜினை படுகொலை செய்யும் ரகசிய உத்தரவுக்கு விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விளாடிமிர் புடினின் பாதையில் குறுக்கிடும் எவருக்கும் நேரும் நிலை தான் தற்போது 62 வயதான எவ்ஜெனி பிரிகோஜினுக்கும் நேர்ந்துள்ளதாக கூறுகின்றனர். உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பில் ரஷ்ய நிர்வாகத்தையும் ராணுவ தளபதிகளையும் எவ்ஜெனி பிரிகோஜின் கடுமையாக விமர்சித்திருந்தார்.
@AP
சுட்டு வீழ்த்திய ரஷ்யா
மட்டுமின்றி, ஈவு இரக்கமற்ற வாக்னர் கூலிப்படையினர் உக்ரைனில் போர் குற்றங்களில் ஈடுபட்டிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக நம்பப்படும் நிலையில், ரஷ்ய தளபதிகள் போரை சரியான திசையில் கொண்டுசெல்லவில்லை என எவ்ஜெனி பிரிகோஜின் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வாகன்ர் கூலிப்படையினரின் நடவடிக்கைகள் ரஷ்ய அரசாங்கத்திற்கு சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த விமானமானது ரஷ்யாவின் Bologovsky மாவட்டத்தில் தரையிறங்கிய நிலையில் விபத்தில் சிக்கியுள்ளது.
@afp
எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் அந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானத்தை ரஷ்ய தரப்பு சுட்டு வீழ்த்தியதாகவும் நம்பப்படுகிறது.
உள்ளூர் மக்கள் இரண்டுமுறை பயங்கரமான சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் விமானம் நெருப்பு கோளமாக மாறியது எனவும் கூறுகின்றனர். விமான விபத்து நடந்த பகுதியில் இருந்து 10 சடலங்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |