இந்தியாவுடன் மீண்டும் எண்ணெய் ஏற்றுமதி... ரஷ்யாவின் புடின் போடும் புதிய கணக்கு
இந்தியாவிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொள்ளும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், எண்ணெய் ஏற்ற்மதி மற்றும் ஆயுத விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் இறக்குமதி
வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்கள் இந்தியாவில் விஜயம் செய்யவிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். இந்த நிலையில், அமெரிக்க அழுத்தம் காரணமாக முடங்கியுள்ள எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பார் என்றே கூறப்படுகிறது.

ரஷ்யா பல தசாப்தங்களாக இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. மட்டுமின்றி, பிப்ரவரி 2022ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் மேற்கத்திய தடைகள் இருந்தபோதிலும், இந்தியா அதன் கடல்வழி எண்ணெய் இறக்குமதியாளராக உருவெடுத்தது.
ஆனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த மாதம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ரஷ்யா மீதான தடைகள் கடுமையாக்கப்பட்ட பின்னர், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
நான்கு ஆண்டுகளில் இந்தியத் தலைநகருக்கு புடின் மேற்கொள்ளும் முதல் பயணத்தில், அவருடன் அவரது பாதுகாப்பு அமைச்சரும் வரவிருக்கிறார்.
இந்த நிலையில், ரஷ்யாவுடனான எந்தவொரு புதிய எண்ணெய் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோபத்தைத் தூண்டக்கூடும் என்று இந்திய தரப்பில் கவலைப்படுகிறார்கள்.

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்கு தண்டனையாக, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியது.
இந்தியாவின் உதவியை
இதனிடையே, புடினின் வருகைக்கு முன்னதாக, இரு தரப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு முதல் கப்பல் போக்குவரத்து மற்றும் விவசாயம் வரையிலான துறைகளில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புடினுடனான இந்திய விஜயத்தில் Sberbank நிர்வாக அதிகாரிகள், ஆயுத ஏற்றுமதி நிறுவனமான Rosoboronexport நிர்வாகிகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் சமீபத்தில் தடை செய்யப்பட்ட எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் GazpromNeft உள்ளிட்டவையின் மூத்த நிர்வாகிகள் ஆகியோரின் குழு ஒன்றும் பங்கேற்கிறது.

மேலும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் முக்கிய விநியோகஸ்தர்களுக்கான அணுகலைத் தடுத்துள்ளதால், ரஷ்யா தனது எண்ணெய் நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற இந்தியாவின் உதவியை நாட வாய்ப்புள்ளது.
இதனிடையே, கச்சா எண்ணெய் இறக்குமதி போலல்லாமல், இந்தியா ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை எந்த நேரத்திலும் முடக்கத் திட்டமிடவில்லை, இந்தியாவில் செயல்படும் பல ரஷ்ய அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு தேவைப்படுகிறது.
மேலும், ரஷ்யா அதன் மிகவும் மேம்பட்ட போர் விமானமான Su-57 ஐயும் வழங்க முன்வந்துள்ளது. ஆனால் இந்தியா தரப்பு இதுவரை ஆயுதங்கள் தொடர்பில் இறுதி முடிவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |