மனைவியின் பிறந்தநாள் விழாவிலும்... வாக்னர் ஆதரவு ரஷ்ய தளபதி புடினால் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்
வாக்னர் கூலிப்படை ஆதரவாளரான ரஷ்ய தளபதி கடந்த இரு வாரங்களாக மாயமாகியுள்ள நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கிளர்ச்சிக்கு ஆதரவளித்தவர்
வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், அந்த கிளர்ச்சிக்கு ஆதரவளித்தவர் என குற்றச்சாட்டை எதிர்கொண்டவர் தளபதி Sergey Surovikin.
இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் செயல்பாடுகள் ரஷ்யாவில் முடக்கப்பட, தளபதி Sergey Surovikin திடீரென்று மாயமானார். தற்போது இரண்டு வாரங்களாக அவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.
ஆனால் அவர் தொடர்பில் கருத்து தெரிவிக்கவும் ரஷ்யா நிர்வாகம் மறுத்து வருகிறது. 56 வயதான தளபதி Sergey Surovikin சமீபத்தில் தமது மனைவியின் பிறந்தநாள் விழாவிலும் காணப்படவில்லை.
@thesun
20 ஆண்டுகள் வரையில் சிறை
இருப்பினும், வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி தொடர்பில் தளபதி Sergey Surovikin கைது செய்யப்பட்டு, ரகசிய முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ரஷ்ய ராணுவ தலைமையை நீக்கும் வாக்னர் கூலிப்படையின் திட்டத்திற்கு தளபதி Sergey Surovikin ஒப்புதல் அளித்திருந்தார் என்றே தகவல் கசிந்துள்ளது. மேலும், அவர் கைது செய்யப்பட்டு ரகசிய முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தால், நாட்டுக்கு துரோகம் இழைத்தன் பேரில் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம்.
வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி வெற்றியடையும் என தளபதி Sergey Surovikin நம்பியிருக்கலாம் எனவும், அல்லது தமது பங்கு இந்த விவகாரத்தில் வெளிவராது என கருதியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
@reuters
மேலும், தளபதி Sergey Surovikin கைது செய்யப்பட்டது உண்மை தான் எனவும், ஆனால் அதன் பின்னணி குறித்து தகவல் வெளியிட முடியாது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |