நேட்டோ நாடுகளுக்கு அருகில் ஆபத்து: அணு ஆயுதங்களைக் கொண்டு இறக்கினார் புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின், தன் நட்பு நாடான பெலாரஸில் அணு ஏவுகணைகளைக் கொண்டு இறக்கியுள்ளார்.
வந்து சேர்ந்தன அணு ஏவுகணைகள்
ரஷ்யாவுக்குச் சொந்தமான அணு ஏவுகணைகள், ரஷ்யாவின் நட்பு நாடாகிய பெலாரஸில் வந்து இறங்கியுள்ள விடயம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதற்கேற்றாற்போல், பெலாரஸ் ஜனாதிபதியான Alexander Lukashenkoவும், தாங்கள் அணு ஆயுதங்களை ஏவத் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளார்.
Credit: AP
நேட்டோ நாடுகளுக்கு அருகில் ஆபத்து
பெலாரஸ் நாடு, நேட்டோ உறுப்பு நாடுகளான லிதுவேனியா, லாத்வியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில், பெலாரஸில் அணு ஆயுதங்கள் வந்து இறங்கியுள்ளதால், ஆபத்து, நேட்டோ நாடுகளுக்கு அருகில் வந்துள்ளது எனலாம்.
சோவியத் யூனியன் பிரிந்த பிறகு ரஷ்யா இப்படி தனது அணு ஆயுதங்களை வேறொரு நாட்டுக்குக் கொண்டு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |