மோடிக்கு இரவு விருந்து வைத்த ரஷ்ய அதிபர் புதின்.., இருவரும் பேசிய முக்கிய விடயங்கள்
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருநாடுகளின் பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ரஷ்யா சென்ற மோடி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறும் இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அதிபர் புதினை சந்தித்த மோடி, இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வணிகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் இருவரும் அதிபர் புதினின் இல்லமான நோகோ ஓகார்யோவோவில் வைத்து தனிப்பட்ட முறையில் பல விடயங்களை பேசியதாக கூறப்படுகிறது.
இந்திய மக்களவை தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதற்கு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், "நீங்கள் உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் இந்திய மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள்" என்று மோடியிடம் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த மோடி, "என்னுடைய இலக்கு என்பது எனது நாடும், எனது மக்களும் தான்" என்று கூறியுள்ளார்.
அதோடு, ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக,"இது போருக்கான சகாப்தம் அல்ல" என்றும் மோடி கூறியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இரவு விருந்து
குறிப்பாக, ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை பணியில் இருந்து விரைவில் விடுவிக்க வேண்டும் என்று புதினிடம் மோடி கூறியுள்ளார்.
புதினின் இல்ல சந்திப்பிற்கு பிறகு கோல்ப் வண்டியில் அப்பகுதியில் உள்ள இடங்களை மோடிக்கு புதின் சுற்றி காட்டினார். இதன்பின்னர், இரவு விருந்தில் இருவரும் உணவருந்தினர்.
இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் உச்சி மாநாட்டில் இந்தியா-ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகள் குறித்து பல முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |